செய்திகள்பிரதான செய்திமலையகம்

மரப்பட்டை கழற்றியதால் மோதல்; சகோதரர் கொலை!

கம்பளை – உடபுஸ்ஸல்லாவ – மடுல்ல பகுதியில் நபர் ஒருவர், சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கு சொந்தமான காணியிலுள்ள வேப்பமரத்தின் பட்டையை கழற்றியெடுத்தமை தொடர்பில் சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, சகோதரர் ஒருவர் பொல்லால் தாக்கியதை அடுத்து 50 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரால் தாக்கப்பட்ட அவரின் சகோதரி, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், உயிரிழந்த நபரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உடபுஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282