in ,

மருதமுனை 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்! 17 பேருக்கு கொரோனா!

கல்முனையின் மருதமுனை பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட 128 பிசிஆர் மாதிரிகளில் 100 மாதிரிகளின் முடிவுகள் இன்று (02) வெளியாகியுள்ளன.

இதன் பிரகாரம் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இனங்காணணப்பட்டதை தொடர்ந்து உடன் அமுலுக்கும் வரும் வகையில் இன்று (2) மருதமுனை -3 கிராம சேவகர் பிரிவு முற்று முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.

இன்று அவசர அவசரமாக கல்முனை மநகர சபை முதல்வர் ஏ.எம் ரக்கீப் தலைமைமையில் எடுக்கப்பட்ட அவசர தீர்மானத்தின் பிரகாரம் சுகாதார துறையினரோடு இணைந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வகையில் மஸூர் மெளலானா வீதியின் தெற்கு பக்கமாக இருந்து சம்ஸம் வீதி, மக்காமடி வீதி, ஹிஜ்ரா வீதி, இஸ்லாம் நகர், பொது நூலக வீதியின் வடக்கு பக்கம் ஆகிய வீதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுகின்றன.

அரசியல் கைதிகளின் விபரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைப்பு

விதிகளை மீறி பயனித்த 3 சொகுசு பஸ்கள் சிக்கின! 49 பேரில் மூவருக்கு கொரோனா!