கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

மருத்துவத் தவறால் சிறுவன் உயிரிழந்த வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஜனவரி 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குறித்த வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த விதுலக்சன் (வயது – 09) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் கடந்த 19.03.2019 அன்று உயிரிழந்திருந்தார்.

இரத்த மாதிரியை மாற்றி வழங்கியதன் காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

மார்ச் 3க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைப்பு

G. Pragas

மாவட்ட ரீதியாக பதிவான வாக்கு வீதம் – முழுமை விபரம்

G. Pragas

டெங்கை கட்டுப்படுத்தும் குழு உருவாக்கம்

G. Pragas

Leave a Comment