செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

மருத்துவ கழிவை எரித்தமை குறித்து மாகாண சுகாதார அமைச்சிடம் விளக்கம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் உள்ள கிராமமொன்றில் பெரும் குழியொன்று அமைக்கப்பட்டு அதனுள் ஆபத்தான மருந்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை விசாரித்து விளக்கமளிக்குமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பிரதம செயளாலர் அ.பத்திநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் இரகசியமான முறையில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டது என்று அந்தப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

தாம் வாழ்வதற்கான பாதுகாப்பை வழங்கக் கோரி மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் நேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது, சுகாதாரக் கிராமத்தில் அமைக்கப்பட்ட குழியினுள் பல ஆயிரம் மருத்து டப்பாக்கள் திறக்கப்படாமல் அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்பட்டது.

இது தொடர்பில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஊடாக பிராந்திய மருத்துவ அதிகாரி பணிமனைக்கும் தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு பிரதம செயலாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவுறுத்தல் கடிதத்தின் பிரதி, வடக்கு மாகாண ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

1000 ரூபாய் சம்பள உயர்வு குறித்து அரசு தௌிவுபடுத்த வேண்டும்!

Tharani

சமஷ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை – சுமந்திரன்

G. Pragas

சோள தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கோழி இறைச்சி விலையை அதிகரிக்க முயற்சி

Tharani