செய்திகள் பிரதான செய்தி

மருந்தகங்களை தினமும் திறக்க முடிவு!

நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் தினமும் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட செயலணியே இதனை தீர்மானித்துள்ளது.

முன்னதாக 5 மணி வரை திறக்கப்படும் எனத் தீர்மானித்த குறித்த செயலணி, சற்றுமுன் 2 மணி வரை திறப்பதென தீர்மானத்தை திருத்தியுள்ளது.

அத்துடன் கொரோனா தொடர்பான அதி உயர் பாதுகாப்பு பகுதிகள் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் திறப்பதில்லை எனவும் தீர்மானத்தை மாற்றியுள்ளது.

Related posts

க.பொ.த (சா/த) பரீட்சையில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவிகள்

G. Pragas

பிறந்து ஒரு நாளான சிசுவுக்கு நேர்ந்த பரிதாபம்- நோர்வூட் பகுதியில் சம்பவம்

Tharani

அரசு அதிகாரங்களைப் பறித்துவிட்டது – மட்டு முதல்வர்

G. Pragas