செய்திகள் பிரதான செய்தி

மருந்துப் பொருட்களுடன் சென்ற அம்புலன்ஸ் சாரதி பலி

பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையை நோக்கிப் பயணித்த அம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில், அம்புலன்ஸ் சாரதி உயிரிழந்துள்ளார்.

கொக்கரல்ல பகுதியில் வீதியை விட்டு விலகிய அம்புலன்ஸ், நடைபாதை தடைக்கல்லில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த அம்புலன்ஸ் உதவியாளர் பொல்கொல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு மருந்துப் பொருட்களையும் பாதுகாப்பு ஆடைகளையும் கொழும்பிலிருந்து கொண்டு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சாரதி தொடம்கஸ்லந்த பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்ரேகர் மரண அடி!

Bavan

ஜனாதிபதி வேட்பாளர் சீலரத்ன தேரர் வடக்கிற்கு விஜயம்

G. Pragas

வறிய மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுப்பதே ஜனாதிபதியின் திட்டம்!

G. Pragas