செய்திகள் பிந்திய செய்திகள் வவுனியா

மர்மப் பொதியாக காணப்பட்ட கழிவுப் பொதியால் ஏற்பட்ட பதற்றம்!

வவுனியா – குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்ட மர்ம பொதியினால் நேற்று (29) இரவு குறித்த பகுதியில் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தபட்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் பயணித்த சிலர் மர்ம பொதி ஒன்றினை வீதி ஓரத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியில் நின்றிருந்த பொது மகன் அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் குறித்த பொதியினை சோதனை செய்து பார்த்தபோது அதனுள் கழிவுப் பொருட்கள் இருந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை பார்வையிட்ட போது கயஸ் வாகனத்தில் வந்தவர்கள் அந்த பொதியினை வீதி ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை அவதானித்ததுடன், வாகன இலக்கத்தையும் பொலிஸார் பதிவு செய்துவிட்டு சென்றனர்.

Related posts

யாழில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்து – மூவர் காயம்

G. Pragas

இலஞ்ச ஊழல் வழக்கு!

Tharani

நான் பயணிக்கும் போது வீதிகளை மூட வேண்டாம்-ஜனாதிபதி

reka sivalingam