இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

மறைந்த நடிகர் பாலாஜின் குடும்பத்துக்கு உதவிய பிரபல நடிகர்கள்!

சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(11) காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சினிமா பிரபலங்கள், விஜய் டி.வி பிரபலங்கள் உட்பட பலரும் அவரது இல்லத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி பாலாஜின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் குறிப்பிட்டளவு பணத்தொகையை அவரது குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார். மேலும், பாலாஜின் பிள்ளைகளின் கல்லூரி வரையான முழுப் படிப்புச் செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

reka sivalingam

குறிஞ்சாக்கேணி பாலம் உடைவு; போக்குவரத்து பாதிப்பு

reka sivalingam

இன்று 15 பேர் குணமடைவு! – குணமடைவு வேகம் உயர்கிறது!

G. Pragas