செய்திகள் பிரதான செய்தி மலையகம்

காணாமல்போன பல்கலை மாணவனை தேட தனி பொலிஸ் குழு

காணாமல்போயுள்ள மலையகத்தை சேர்ந்த மருத்துவபீட மாணவனை தேடும் பணி இன்று (14) நான்காவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. எனினும் எவ்வித தகலும் கிடைக்கவில்லையென மாணவனின் உறவினர்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில், கல்லடி பாலத்துக்கு அருகாமையில் வைத்தே இறுதியாக தொலைபேசி இயங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், சீசீடிவி கமரா காட்சிகளும் ஆராயப்பட்டுவருகின்றன. தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவும் ஆராயப்படவுள்ளன. இவ்விவகாரத்தை கையாள்வதற்கு தனி காவல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்தனர்.

அக்கரபத்தனை ஹோல்புறுக் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மோகன்ராஜ் என்ற கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனே கடந்த 10ம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.

Related posts

கட்சி யாப்பைத் திருத்தினால் யானைச் சின்னம் கிடைக்கும்

Tharani

மருந்துகளின் விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

Tharani

இலங்கை தூதுவராக கடமையாற்ற கிடைத்தமை கெளரவம் – சீன தூதுவர்

reka sivalingam