செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மல்லாகம் முகாமில் உள்ள மக்களை சந்தித்தார் தொண்டா

யாழ்பாணம் – மல்லாகம், நீதிவான் முகாமில் உள்ள மக்களில் நிலைமைகள் தொடர்பில் இன்றையதினம் (21) சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

கடந்த 30 வருடங்களாக மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலம்புரி முகாங்களில் தமது வாழ்க்கையினை பல கஸ்டங்களுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

குறித்த முகாமில் 53 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்து.

தாங்கள் பிறந்து வளர்ந்த தமது சொந்த நிலத்தில் தாம் வாழ வேண்டும் எனவும் மக்கள் அமைச்சரிடம் கேரிக்கை விடுத்திருந்தனர்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

‘ஈனோரெக் 2020’ தேசிய கண்காட்சி இம்மாதம் ஆரம்பம்

Tharani

சஜித்தை ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்

Tharani

கள மருத்துவமனையாக மரகனா விளையாட்டு அரங்கம்

Tharani