in , ,

மஸ்குலர் டிஸ்ரோபியால் பாதிக்கப்பட்ட மகனை கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிக்கு வழிதேடும் தந்தை!

அமெரிக்கா – தென் மேற்கு ப்ளோரிடாவில் மஸ்குலர் டிஸ்ரோபி (தசைத்திறன் குறைபாடு) நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தந்தை ஒருவர் கொரோனா தடுப்பூசியை பெற்று கொள்ள பல்வேறு வழிகளில் முயன்றுவருகின்றார்.

சுகாதார பணியாளர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், தனது மகனையும் பாதுகாக்க வேண்டும் என்று சன்ரோ ரொட்ரிகியுஸ் என்ற தந்தை தெரிவித்துள்ளார்.

மஸ்குலர் டிஸ்ரோபி நோயினால் 3 வயதில் இருந்து போராடிவரும் அவரது மகன் அலெக்ஸ் ரொட்ரிகியுஸ் இந்த ஆண்டு 30 வயதை எட்டவுள்ளார்.

மகன் தினமும் பயப்படுகிறார். ‘அப்பா நான் மரணமடையப் போகிறேனா? அல்லது கொரோனாவால் பாதிப்படையப் போகிறேனா?’ என்று எப்போதும் மகன் தன்னிடம் கேட்பதாக ரொட்ரிகியுஸ் தெரிவித்தார்.

குணப்படுத்த முடியாத மஸ்குலர் டிஸ்ரோபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை உட்பட உலகம் முழுவதும் காணப்படுகின்றனர். குறைந்த ஆயுற்காலத்தை கொண்ட இந்த நோயாளிகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் தற்போதைய கொரோனா தொற்று நிலைமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே ரொட்ரிகியுஸ் தனது மகனுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டுமென வழிதேடியலைகின்றார்.

யாழில் மீண்டும் கொத்தணி அபாயம்; பாதுகாப்பாக செயற்பட அறிவுறுத்துகிறார் மகேசன்

ஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணை அறிக்கை தமக்கும் வேண்டுமாம் – பாெதுபல சேனா