செய்திகள்

மஹாபொல கொடுப்பனவில் அரசின் தீர்மானம்!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 15ம் திகதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் நிலுவைப் பணம் எதிர்வரும் வாரத்தில் வழங்கப்படும். அதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 15ம் திகதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹாபொல புலமைப்பரிசில் தொகை 10 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்குமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். மஹாபொல நிதியத்திற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் மஹாபொல புலமைப்பரிசிலுக்காக 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்கின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆரம்பித்த மஹாபொல நிதியத்தில் 10.5 மில்லியன் ரூபா நிதி இருந்தது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் 2 பில்லியன் ரூபா நட்டம் இழக்கப்பட்டது.

நட்ட நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டமையே இதற்கான காரணமாகும். இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

மஹாபொல நிதியத்தை 20 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Related posts

மோசடியார்களை விடவும் அரசே எதிர்க்கிறது

G. Pragas

தேர்தலில் மாற்றமில்லை – அறிவித்தார் மஹிந்த!

G. Pragas

திருமலையில் 16 வயது சிறுமி தற்கொலை!

Tharani