செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

மஹிந்தவை எதிர்த்து உண்ணாவிரதம்: தம்பிராசா கைது!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (14) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசாவை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்தனர்.

ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பின்போது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுபவர்களின் பெயர், விபரங்கள் தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது. இதனை தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்தபோதும் அந்த பெயர், விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரியே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

அவர் போராட்டத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே யாழ் மாவட்ட தேர்தல்கள் அலுவலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகளை விசாரிக்க ஆள் பற்றாக்குறை

G. Pragas

வலையில் சிக்கிய சுறா

Tharani

123 கிலோ கடலட்டைகளுடன் ஐவர் கைது!

G. Pragas

Leave a Comment