in

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுபாடுகள் விதிகளை மக்கள் அறிந்திருக்க வேண்டும்!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்துக்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் இடங்களில் 2,999 வாகனங்களும் அவற்றில் பயணித்த 5,494 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட 53 வாகனங்களில் பயணித்த 103 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அரச உத்தியோகத்தர்கள் சகலரும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் அவர்களும் மருத்துவ சிகிச்சை நெருங்கிய உறவினர்களின் மரண சடங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக செல்பவர்களுக்கும் மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இவ்வாறு மாகாணங்களுக்கிடையில் பயணிப்போர் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்படும்போது மேற்கொள்ளப்பட்டால் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் மேலும் 82 பேர் கொரோனாவால் மரணம்!

தடுப்பூசி பெற்றதற்கான அட்டையை நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் கைவசம் வைத்திருப்பது கட்டாயம்!