செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

மாகாண சுகாதார அமைச்சின் முறையற்ற செயலினால் முற்றுகையிட்ட மக்கள்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் எனக் கோரி பண்ணைப் பகுதி மக்கள் நேற்று (29) சுகாதார அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் (சுகாதாரக் கிராமம்) காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்ரிக் போத்தல்களுடன் குழி தோண்டி அதனுள் போட்டு நேற்று முன் தினம் (28) தீ மூட்டியுள்ளனர்.

இதனால் பிளாஸ்ரிக் போத்தல்கள் எரிந்தும், மருந்துகள் எரிந்தும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் நாற்றம் வீசியதுடன் அயலவர்களுக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர்.

இதனையடுத்து அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கும் அறிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் தீயினை அணைக்க முற்பட்ட போது அவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டது. அதன் மத்தியிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,

வளாகத்தில் மருந்து பொருட்களை எரியூட்டி அழிக்க அனுமதிக்கவில்லை. அவற்றை உரிய முறையில் எரியூட்டி அழிக்க உரிய இடத்திற்கு அனுப்பி வைக்குமாறே பணிக்கப்பட்டது. அந்த நிலையில் மருந்தாளர் ஒருவரின் எதேச்சைகரமான முடிவினால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது – என்றார்.

இந்நிலையிலேயே சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் செயலைக் கண்டித்தும் தாம் உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரியும் பண்ணைக் கிராம மக்கள், மாகாண சுகாதார அமைச்சினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

கிளியில் கொரோனா தொற்று இல்லை; அச்சம் வேண்டாம்!

Tharani

பாகிஸ்தானை சென்றடைந்தது இலங்கை

Tharani

உரும்பிராயில் கசிப்புடன் இளைஞன் கைது!

G. Pragas