உலகச் செய்திகள் செய்திகள்

மாணவன் மீது துஷ்பிரயோகம்! ஆசிரியை கைது!

மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் மொனராகலைப் பொலிஸார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவனையும் நேற்று (11) கைது செய்தனர்.

மொனராகலைப் பகுதி பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றி வருபவர், 10ம் ஆண்டு கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை பிரத்தியேக வகுப்பிற்கு வருமாறு, தமது வீட்டிற்கு அழைப்பித்து அம்மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவன் வீட்டிலிருக்கும் போது, குறிப்பிட்ட ஆசிரியை அடிக்கடி கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வந்ததை மாணவனின் தாய் கண்டு சந்தேகம் கொண்டுள்ளார். அத்தாய் மகனுக்குத் தெரியாமல் மகனின் கையடக்கத் தொலைபேசியை எடுத்து ஆசிரியையிடமிருந்து மகனுக்கு வந்த குறுந்தகவல்களைக் கண்டு விடயத்தை புரிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து மாணவனின் தாய் மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இப்புகாரையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட ஆசிரியையின் வீட்டிற்கு சென்று ஆசிரியையையும் அம்மாணவனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையிலான உறவு கடந்த ஒருவருடமாக இடம்பெற்று வருவதும், மாணவனை கட்டாயப்படுத்தி தமது வீட்டிற்கு வரவழைத்து ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட ஆசிரியை இரு பிள்ளைகளுக்கு தாயான 41 வயதுடையர் எனத் தெரியவருகிறது. இவ்விருவரையும் மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முன்பு குறிப்பிட்ட மாணவனின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அம் மாணவனை மொனராகலை வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

Related posts

சர்வாதிகார ஆட்சியில் கோத்தாபய அரசு

Tharani

சட்டவிரோத மண் அகழ்வை கண்டித்து நாளை கவனயீர்ப்பு

கதிர்

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர்

கதிர்