செய்திகள்

மாணவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறை இரத்து

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறையை இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை இரத்து செய்வதற்கு தீர்மானித்ததாக அதன் செயலாளர் என் எம் எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பல கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

அதன்படி 10, 12 மற்றும் ஐந்தாம் தர வகுப்புகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவில் தாமதம் என கண்டனம்

G. Pragas

மனைவியின் தாக்குதலில் கணவன் பலி!

reka sivalingam

பாலியல் லஞ்சம் கோரிய பொலிஸ் பொறுப்பதிகாரி

reka sivalingam