கிழக்கு மாகாணம் செய்திகள்

மாணவர்கள் ஊடாக சூழல் பாதுகாப்புக்கான வளமாக்கல் திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் தோறும் பாடசாலை மாணவர்களுக்கூடாக சூழல் பாதுகாப்புக்கான வளமாக்கல் திட்டம் என்னும் தொனிப் பொருளில் நாற்றுக்களை உற்பத்தி செய்தல் தொடர்பாக கருத்தரங்கு மற்றும் பயிற்சிகளை நடாத்தி வருகின்றது.

இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கும், செய்முறை பயிற்சியும் கருத்தரங்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.எம்.ஏ.சி.றமீஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை, தியாவட்டவான் அறபா வித்தியாலய மாணவர்களும், பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள்;, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தின் விவசாய போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்டீன் வளவாளராக கலந்து கொண்டு நாற்றுக்களை உற்பத்தி செய்தல் தொடர்பான விளக்க கருத்துக்களை வழங்கினார். (கு)

Related posts

மகாவலி ஆறு பெருக்கெடுக்கும் அபாயம்! மக்களுக்கு எச்சரிக்கை!

reka sivalingam

முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்கும் பிரேரணைக்கு எதிராக வழக்கு

கதிர்

வைத்தியர் இன்மையால் மூடப்பட்டது பூண்டுலோயா வைத்தியசாலை!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.