கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

மாணவியின் சகோதரனுக்கு கொரோனா; கிளிநொச்சி வளாகம் மூடல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில்கல்வி பயிலும் மாணவியின் சகோதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் அடிப்படையில் கிளிநொச்சி வளாகத்தின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.

வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று (12) மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இங்கு பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிவரும் ஒரு இராணுவ வீரராவார்.

அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Tharani

யாழ்ப்பாண விமான நிலையப்பணிகள் முடங்கிய நிலையில்!

reka sivalingam

தோல்வியை ஒப்புக்கொண்டு சஜித் வாழ்த்து

G. Pragas