செய்திகள் பிந்திய செய்திகள்

மாதவிடாய் பற்றிப் பேசுவது குறித்து கேலி செய்பவர்கள் வெக்கப்பட வேண்டும்

“ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரே­ம­தாச ஏனையோர் சிந்­திக்­காத, பேச­ முன்­வ­ராத விடயம் தொடர்பில் சிந்­தித்து பெண்­க­ளுக்கு அவ­சி­ய­மான சுகா­தார வச­தி­களை இல­வ­ச­மாகப் பெற்றுத் தரு­வ­தாகக் உறு­தி­ய­ளித்­துள்ளா்.

ஆனால் சிலர் இவ்­வி­டயம் தொடர்பில் கேலி செய்யும் வகையில் கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றார்கள். அவ்­வாறு செயற்­ப­டு­வது குறித்து அவர்கள் வெட்­கப்­பட வேண்டும்”

இவ்வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பினர் துசிதா விஜ­ய­மான்ன தெரி­வித்தார். மேலும்,

கிரா­மப்­ப­கு­தி­களில் பெண்கள் பெரும் கடன்­பொ­றிக்குள் சிக்­கி­யி­ருப்­ப­தையும் காண­மு­டி­கி­றது. அதன் விளை­வாக பல பெண்கள் தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றன. எனவே இக்­கடன் பொறி­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு பெண்­க­ளுக்கு நிவா­ர­ண­மொன்றை வழங்க வேண்­டு­மென்ற விடயம் குறித்து தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தைத் தயா­ரிக்கும் போது அவ­தானம் செலுத்­தினோம்.

அடுத்­த­தாக பெண்­களின் சுகா­தாரப் பிரச்­சினை குறித்துப் பேசிய சஜித் பிரே­ம­தாச, அதற்­கு­ரிய சுகா­தார வச­தி­களை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தா­கவும் கூறி­யி­ருந்தார். எமது நாட்டின் கலா­சா­ரத்தைப் பொறுத்­த­வரை பெண்­களின் மாத­வி­டாய்­கால சிக்­கல்கள் தொடர்பில் வெளிப்­ப­டை­யாக பேசப்­ப­டாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் உண்­மையில் இதன் கார­ண­மாக பெண்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கும், வேறு­பல கிரு­மித்­தொற்று நோய்­க­ளுக்கும் முகங்­கொ­டுக்­கின்­றார்கள்.

இந்­நி­லை­யி­லேயே எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏனையோர் சிந்திக்காத, பேசமுன்வராத விடயம் தொடர்பில் சிந்தித்து, பெண்களுக்கான சுகாதார வசதிகளை இலவசமாகப் பெற்றுத்தருவதாகக் கூறினார். – என்றார்.

Related posts

2ம் லெப் மாலதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

G. Pragas

யாத்திரை சென்று வந்தோர் கே’புலவில் தனிமைப்படுத்தல்

G. Pragas

வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு!

Tharani