செய்திகள் பிரதான செய்தி

மாத்தறையில் இன மோதல்! கட்டுக்குள்

மாத்தறை – கிரிந்த, புஹுல்வெல்ல பகுதியில் முஸ்லிம் இளைஞர்களுக்கும் சிங்கள இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை முற்றியதால் இன்று மாலை அங்கு பதற்றம் நிலவியது.

நேற்று சிங்கள இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஊரில் இருந்து தப்பியோடியுள்ள அதேவேளை இன்று வெற்று மதுபான போத்தல்கள் அங்குள்ள விகாரை வளவுக்குள் வீசப்பட்டுள்ளன.

இதனையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையில் மேதால் வெடித்தது. ஆனாலும் அங்குள்ள சிங்கள – முஸ்லிம் பெரியார்கள் அமைதி நடவடிக்கைகளை எடுத்தபடியால் நிலைமை சுமுகமாகியுள்ளது.

பொலிஸார் அங்கு மேலதிக பாதுகாப்புக்காக அனுப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது 15 வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இளைஞர்களின் சேவை; மேம்பட்ட குடும்பம்

reka sivalingam

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; கத்தி வெட்டு

G. Pragas

கரம் கொடுத்த “அன்பே சிவம்” அமைப்பு!

reka sivalingam