in ,

மாத்தளனில் உள்ளூர் மீனவர்கள் அறுவர் கைது!!

முல்லைத்தீவு – மாத்தளன் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் 4 சிறு படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவி பணிப்பாளர் விஸ்வலிங்கம் கெலிஸ்டன் தெரிவித்தார்.

நேற்று 2 மீனவர்களும் இன்று 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (20) கைது செய்யப்பட்ட 2 மீனவர்களும் முல்லைத்தீவு நீத.வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று கைது செய்யப்பட்ட மீனவர்களை நீத.வான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை புல்மோட்டை மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டனர்.

அல்வாய் சம்பவம் நால்வர் கைது!

பொலிஸார் 11 பேர் உட்பட யாழில் 15 பேருக்கு இன்று உறுதி!