செய்திகள் பிரதான செய்தி

மானிப்பாய் தாக்குதல்; ஆவாகுழு உரிமை கோரல்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் நவாலிப் பகுதியில் வீடொன்றில் நேற்று (11) இரவு இடம்பெற்ற தாக்குதலுக்கு தாம் தான் காரணம் என ஆவாக் குழு ஒப்புக் கொண்டுள்ளது.

ஆவா செய்திகள் என்ற பெயரிலான முகநூல் பக்கம் ஒன்றின் ஊடாக இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது.

பகிடிவதையின் காரணமாக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட முதலாவது மாணவனின் வீட்டிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அடையாளம் தெரியாத நால்வரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துக்கே ஆவா உரிமை கோரியுள்ளது.

அத்தோடு பல்கலைக்கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாராவது செயற்பட்டால் மேலும் தாக்குதல் சம்பவங்களை நடத்துவோம் என்றும் குறித்த முகநூல் பக்கத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது.

Related posts

சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்

Bavan

இராணுவ ஆட்சியாளர் முஷாரப்பிற்கு மரண தண்டனை!

Bavan

சடலத்தை புதைத்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்

G. Pragas

Leave a Comment