in ,

மானுருவி கிரவல் அகழ்வு விவகாரம்; இருவருக்கு பிணை!

முல்லைத்தீவில் அனுமதிப்பத்திரமற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிரவல் அகழப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 22ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளர் என கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டதுடன் கிரவல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட டோசர் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த பெண், அப்பகுதியிலுள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தா ‘ஹிட்லராக’ மாற மாட்டார்; ராஜபக்சவினர் ஹிட்டலரை எதிர்த்தவர்கள்!

முள்ளிவாய்க்காலில் கப் வாகனம் மோதி இராணுவ சிப்பாய் பலி!