in ,

மாபியாக்களால் காட்டு மரங்கள் அழிப்பு! மிருகங்கள் வேட்டை!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் பெறுமதியான காட்டு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுடன், மிருகங்களும் வேட்டையாடப்பட்டுள்ளன.

கந்தளாய், வான்எல, சைதாபிட்டி பகுதியில் இவ்வாறு இனந்தெரியாதோரால் அதிகளவான பல, வீர மற்றும் வின்னாங்கு மரங்கள் பெருமளவில் வெட்டி வீழ்த்தப்பட்டும், தீ வைக்கப்பட்டும் காணப்படுகின்றன.

இத்தோடு, வேட்டையாடிய மானின் எழும்புக்கூடு மற்றும் அதன் கொம்புகளும் அப்பகுதியில் காணப்படுகின்றன.

இந்தச் சட்டவிரோத செயல்களைச் செய்த நபர்களை தேடிவருவதாக கந்தளாய் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி பகுதி அதிகளவான தொல்பொருள் இடங்கள் காணப்படும் ஒரு பகுதியாக இப்பகுதி காணப்படுவதாகவும் வனப் பாதுகாப்புக் கற்களும் வீசப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸாரும் கந்தளாய் வனப் பாதுகாப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னாரில் கத்தோலிக்க ஆலயங்கள் மீது தாக்குதல்!

சிசுவை கொலை செய்து தீ வைத்த தாய்க்கு விளக்கமறியல்..!