in , ,

மாமனாரால் தாக்கி கொல்லப்பட்ட மருமகன் – சடலம் வீதியில் வீசப்பட்டது!

நுவரெலியா – கொத்மலை, வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்று (15) இரவு மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு, மாமனார் பொல்லால் தாக்கியதில் மருமகன் பலியாகியுள்ளார்.

கெமினிதென்ன பிரிவில் வசித்த கணேசன் விஜயகுமார் (35-வயது) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

தாக்குதல் தொடர்பில் 1990 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பெடுத்து அறிவித்த நிலையில் நோயாளர் காவு வண்டி அங்கு வர தாமதமானதால் தாக்குதலை நடத்திய மாமா தனது முச்சக்கர வண்டி மூலம் காயமடைந்தவரை நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு கொண்டுச் செல்லும் போது நோயாளர் காவு வண்டி இடையில் வந்துள்ளது. அப்போது நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் காயமடைந்தவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் தாக்குதலை நடத்தியவர் சடலத்தை கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய மாமா கொத்மலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விவேக் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

வெலிமடயில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!