செய்திகள் பிரதான செய்தி

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு நாள் இன்றாகும்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின்14 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் மாலை இரண்டு மணிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடாத்துவதற்கு தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு இளைஞரணியினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இவர் டிசம்பர் 24, 2005 அன்று படுகொலை செய்யப்பட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர். தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய அன்னாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் மாமனிதர் விருது வழங்கப்பட்டது. மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது துப்பாக்கிதாரிகளால் பரராஜசிங்கம் சுடப்பட்டார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன்( பிள்ளையான்) கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் இந்து கல்லூரி ஆசியர்களின் மின்வழிக் கற்கைநெறி!

Bavan

நாட்டின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

Tharani

சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சம்!

Tharani