செய்திகள் பிரதான செய்தி

மாமனிதர் ரவிராஜின் சிலையை அலங்கரித்த பூச்சாடிகள் உடைப்பு!

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று (09) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ரவிராஜின் உருவச்சிலையை மூடி சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் நேற்று முன் தினம் கட்டப்பட்டிருந்த கறுப்பு, சிவப்பு துணிகளும் அகற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டை அச்சுறுத்தும் இனவாத அமைப்புக்கள் ஒழிக்கப்படும் – பிரதமர்

G. Pragas

வாழைச்சேனை சலூன் நிலையங்களுக்கான கட்டுப்பாடு!

G. Pragas

மன்னாரில் ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

கதிர்