செய்திகள் பிராதான செய்தி மலையகம்

மார்ச் முதல் “1000 ரூபாய்” சம்பளம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இந்த செய்தியை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (14) சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கைத்தொழில் துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள வரிவிலக்கு, உர மானியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அதில் உள்ளடங்கும்.

இந்த நிவாரணங்கள் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கே கிடைப்பதால் அதன் நன்மைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறை அடையும் முன்னேற்றத்துடன் இணைந்ததாக அதன் நன்மைகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

கடற்கரை ஓரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Tharani

கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

கதிர்

மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட தூதரக ஊழியர்

reka sivalingam

Leave a Comment