செய்திகள்

மாற்றுத்தலைமை பயனற்றது: சிவமோகன் தெரிவிப்பு


மாற்றுத் தலைமை என்பது பயனற்ற விடயம் என்றும் மாற்றுத்தலைமை என்ற கோசத்தை முன்வைத்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் உருக்குலைந்துள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நேற்று (20 ) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றுத்தலைமை என்பது ஒரு பயனற்ற விடயமாகும். ஏதோவொரு வெளிசக்தி இவர்களை இயக்குவதாகவே சந்தேகிக்கின்றோம். வேறு பண மூலங்கள் மூலம் இவர்கள் இயக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகமும் உண்டு.

வட, கிழக்கில் வாழாதவர்கள் மாற்றுத்தலைமை என்று கூறிக்கொண்டு வருவதை எமது தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தலைமைகள் எமது வட, கிழக்கு மாகாணத்தில் இருந்து உருவாக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத எந்த ஒரு தலைமைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்காது” என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

மலையகத் தியாகிகள் தின அனுஷ்டிப்பு

reka sivalingam

சமூக வலைத்தளப் பிரச்சாரம் – 162 முறைப்பாடுகள்

G. Pragas

நெல்லியடியில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் மூவர் கைது

reka sivalingam

Leave a Comment