கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

மாற்றுத்தினாளிகளின் கைப்பணி கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவர்களது படைப்பாக்கத்திறனை பிரதிபளிக்கும் வகையிலான கண்காட்சி கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வந்தாறுமூலை வாளக நல்லையா மண்டபத்தில் இன்று (05) நடைபெற்றது.

“திறன் வெளிப்பாட்டில் மாற்றுத்திறனாளிகளின் கலை ஆக்க செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்திய ஆய்வினை” அடிப்படையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

மாவட்டத்தில் இயங்கும் 25 மாற்றுத்திறனாளிகளின் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ் புகலிடம் மற்றும் பாடசாலை வளாகத்துக்கு உட்படுத்தப்படாத தனியார் பாடசாலைகளாக மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையம் ஆகியவற்றிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆக்கங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டன.

பங்குகொள் ஆய்வாளர் அரங்க ஆற்றுகை வழிப்படுத்தலின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பாடல், இசை மூலமான நடனம் மற்றும் நாடகம் அரங்கேற்றப்பட்டன.

கிழக்குப் பல்கலைகழக நுண்கலைத் துறையின் சிறப்புக்கற்கை நான்காம் வருட ஆய்வினை பூர்த்தி செய்யும் வகையில் நுண்கலைத்துறை இறுதிவருட மாணவி எஸ்.பாத்திமா ஷர்பின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு நுண்கலைத்துறைத் தலைவர் சு.சந்திரகுமாரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு பல்கலைகழகத்தின் கலைக்கலாசார பீடாதிபதி முனியாண்டி ரவி இந்நிகழ்வினை அலங்கரிப்பதற்காக விஷேட அதிதியாக வருகை தந்த

மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவர் மட்டக்களப்பு புகலிட அமைப்பின் பணிப்பாளருமாகிய அருட்சகோதரர் எஸ்.எஸ்.டெரன்ஸ், மட்டக்களப்பு சென்.ஜோசப் விசேட கல்வி நிலையத்தின் எம்.ஏ.பரீஸ்கரன், சிறப்பு அதிதியாக வருகைதந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.ஜெயசங்கர் அவர்களும் கலந்து கொண்டனர்.

இன்றைய சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஓர் தடத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு என்று சமூகத்தில் ஓர் இடம் வழங்க வேண்டும் எதிர்காலத்தில் அவர்களாகவே ஓர் சுய தொழிலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. (NK)

Related posts

மகிந்தவிற்கு கடிதம் எழுதிய லண்டன் சிறுவன்

reka sivalingam

தனிமைப்படுத்தல் மையங்களில் 1723 பேர்

G. Pragas

டயகமவில் சிசுவின் சடலம் மீட்பு!

G. Pragas