மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா தையல் நிலையம் கறுவாக்கேணியில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தையல் இயந்திரங்களும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் அதனோடு இணைந்த பொருட்களும் வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. (150)