in

மாலியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!!

மாலியை சோ்ந்த ஹலீமா சிஸ் என்ற 25 வயதான பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன.

அந்தப் பெண்ணுக்கு 7 குழந்தைகள் பிறக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டு வந்த நிலையில், மொராக்கோவிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு 5 பெண் குழந்தைகளும் 4 ஆண் குழந்தைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை (04) பிறந்துள்ளன.

குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், மருத்துவமனையில் வைத்து குழந்தைகளை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இதுவரை அவுஸ்திரேலியாவில் ஒரு பெண்ணுக்கும் மலேசியாவில் ஒரு பெண்ணுக்கும் மட்டுமே ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. எனினும், அந்தக் குழந்தைகள் யாரும் உயிர் பிழைக்கவில்லை.

தென்மராட்சி பிரதேச செயலக பொதுமக்கள் சேவை நிறுத்தம்!!

சங்கானையில் முகக்கவசமின்றி நடமாடியோர் மீது சட்டநடவடிக்கை!!