செய்திகள் பிந்திய செய்திகள்

மாலைதீவைச் சென்றடைந்தார் பிரதமர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (02) காலை மாலைதீவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் விமான நிலையத்தில் வைத்து அரச மரியாதைகளுடன் வரவேற்றார்.

மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைவாகவே மாலைதீவு சென்றுள்ள பிரதமர், 3ம் திகதி தொடக்கம் 4ம் திகதி வரையில் மாலைதீவில் பெரடைஸ் அயிலன் றிசோட் ஹோட்டல் வளவில் நடைபெறும் 2019ம் ஆண்டு இந்து சமுத்திர மகாநாட்டுக்காக தலைமைப் பொறுப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வகிக்கவுள்ளார்.

இந்த விஜயத்தில் பிரதமருடன் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, சமூக ஊக்குவிப்பு அமைச்சர் தயாகமகே, கனியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

மாணவர்களுக்கு காப்புறுதி தொடர்ந்தும் அமுலில்!

Tharani

மன்னாரில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

G. Pragas

நாளை முதல் வெளியாகிறது உதயனின் சஞ்சீவி!

Bavan