செய்திகள் பிரதான செய்தி

மின்சார சபை ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடை!

கொரோன தொற்றில் இருந்து இலங்கை மின்சார சபை சேவையாளர்கள், ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு ஆடையை இலங்கைமின்சார சபையின் ஹட்டன் காரியலயத்தில் இன்று காலை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

மின்சார வேவையாளர்கள் மின்சார அவசர தேவை நேரங்களில் பொதுமக்கள் நிறைந்த பகுதிகளுக்கு செல்கிற போது அவர்களுக்கான பாதுகாப்பு கருதியே மேற்படி ஆடை தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரி தெரிவித்தார்.

கடமை நிமித்தம் வெளியில் சென்று திரும்பும் மின்சாரசபை சேவையாளர்களை தொற்று நீக்கி கிருமிநாசினி தெளித்து உள்வாங்குவதுடன் அவர்கள் பயணித்த வாகனத்திற்கும் தொற்று நீக்கி கிருமிநாசினி தெளித்து பாதுகப்பை உறுதிபடுத்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

இன்றைய நாள் ராசி பலன்கள் (10/2) – உங்களுக்கு எப்படி?

Bavan

இன்றைய கார்டூன்கள்

G. Pragas

வடபகுதியின் இன்றைய கொரோனா நிலவரம்!

Bavan