செய்திகள் பிரதான செய்தி

மின்சார கட்டணத்தில் 25% குறைக்க அரசு இணக்கம்!

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட முடக்கநிலை காரணமாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலுக்கான மின்சாரக் கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அத்துடன், இந்த நிவாரணங்கள் குறையாது என்பதுடன் 25 வீதம் விலைப் பட்டியல் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (09) அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்,

“மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் நிலுவைப் பணம் அறவிடப்படமாட்டாது. இதனால் ஏற்படும் நட்டத்தை இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொள்ளும்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் மின்சாரத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தமது அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.

எதிர்காலத்தில் மின் கட்டணம் குறையுமே தவிர அதிகரிக்கப்பட மாட்டாது” – என்றும் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

Related posts

சஜித் அணியின் ​கோரிக்கை நிராகரிப்பு!

Tharani

“நாடோடிகள்-2” படத்துக்கு தடை விதித்தது நீதிமன்றம்

G. Pragas

காணாமல் ஆக்கப்பட்டோரின் உயிரை தர முடியாது: வாசு

G. Pragas