செய்திகள்பிரதான செய்தி

மின்சார கட்டண அதிகரிப்பு; அரசால் சலுகை அவசியம் -திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிச் சூழலால் அதிக மின்கட்டணத்தை செலுத்த முடியாத மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் அல்லது சலுகையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்கள் தொடர்ச்சியான விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு மக்களுக்கு மேலும் பாதிப்பாக அமைந்துள்ளது.

மின்சாரக் கட்டணம் அதிகளவாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் மாற்றுவழியை வழங்க வேண்டும். அல்லது பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.

அதிக மின்கட்டணத்தை செலுத்த முடியாத மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவேண்டும்.– என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282