செய்திகள் பிராதான செய்தி வவுனியா

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்; 16 பேருக்கு மறியல்

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களை தாக்கி, காயப்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட 16 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் இன்று (08) உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சார சபை ஊழியர்கள், கடமையின் பொருட்டு சென்றிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று கண்மூடித்தனமாக தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் சிலரை தொடர்ச்சியாக கைது செய்திருந்த போதிலும் பிரதான சந்தேகநபரை கைது செய்திருக்கவில்லை. எனவே மின்சாரசபை ஊழியர்கள் பிரதான சந்தேகநபரை கைது செய்யுமாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பிரதான சந்தேகநபர் தனது சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்தார். அந்தவகையில் பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேர் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

யாழ் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது

G. Pragas

தேரரின் உடலை நீராவியடி ஆலயத்தில் எரிக்க நீதவான் தடை விதித்தார்!

G. Pragas

உலக வங்கி சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கைக்கு 99ம் இடம்

G. Pragas

Leave a Comment