in ,

மின்னல் காரணமாக எரிந்த மின் உபகரணங்கள்!

மின்னலால் எரிந்த மின் உபகரணங்கள்

தருமபுரம் பகுதியில் இடிமின்னல் காரணமாக, மின்சாதனப் பொருள்கள் எரிந்து செயலிழந்துள்ளன. அதனால் தமக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். தருமபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் 1.30 அளவில் இடம்பெற்றது.

“திடீரென பெரும் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து எமது வீட்டுக்குள் புகைமண்டலம்போல இருந்தது. பின்னர் மின்குமிழ்கள் உடைந்து வீழ்ந்தன. தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து புகைவந்தது. பின்னர் வீட்டுக்கு அருகில் இருந்த பனைமரம் தீப்பற்றி எரிந்ததை அவதானித்தோம். பனை மரத்தில் பற்றிய நெருப்பை அணைத்தோம். பின்னர் சிறிதுநேரம் கழித்து தண்ணீர்ப் பம்பியை இயக்க முற்பட்டபோது அது இயங்கவில்லை. அதுவும் எரிந்து செயலிழந்துவிட்டது என்பது பின்னர் தெரியவந்தது.
இடி மின்னல் தாக்கம் ஏற்படும்பொழுது நாங்கள் எந்தவித மின் உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை.

ஆனால், மின் இணைப்பில் (பிளக்கில் பொருத்தப்பட்டநிலையில்) இருந்தது. தொலைக்காட்சி அன்டனாவும் இணைப்பில் இருந்தமையே இந்த இடருக்குக் காரணம் என்று கருதுகின்றோம்.” எனறு அந்தக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் கிளிநொச்சி, முல்லையில் ஆரம்பம்!

சாவகச்சேரியில் அன்டிஜென் 13 பேருக்கு தொற்றுறுதி!