செய்திகள் பிரதான செய்தி

மின் கட்டண விவகாரம்; நிவாரணம வழங்க அரசு முடிவு!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அதிகரித்து காணப்பட்ட மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

குறித்த நிவாரணத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் கலந்து ஆலோசிப்பதற்காக இன்று (02) குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலங்களில் மின் கட்டணம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்டதாக பாவனையாளர்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தௌிவுப்படுத்தப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும் விதம் தொடர்பிலான அறிக்கையை வெகுவிரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Related posts

சீனாவிலிருந்து; இலங்கை வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

reka sivalingam

அர்ப்பணிப்பை கௌரவப்படுத்த தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படும்!

Tharani

அர்ஜூன் மீதான பிடியாணையை செயற்படுத்த உத்தரவு!

G. Pragas