செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

மிரண்டது இந்தியா! வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா!

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று (14) மும்பையில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் அவுஸ்ரேலிய அணி, இந்திய அணியின் வெற்றி இலக்கான 256 ஓட்டங்கள் என்ற இலக்கை வெறும் 37.4 ஓவர்களில் விரட்டியடித்து எந்தவிதமான விக்கெட் இழப்புமின்றி வரலாற்று வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் சிகார்த் தவான் 74 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ராக் 3 விக்கெட்களையும் கம்மின்ஸ் மற்றும் ரிச்சட்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணி எந்தவிதமான விக்கெட் இழப்பின்றி 258 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை தனதாக்கியது.

இதன்போது துடுப்பாட்டத்தில் டேவிட் வோர் 128 ஓட்டங்களையும் அரோன் பிஞ் 110 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று சிறப்பித்திருந்தனர்.

இன்றைய அவுஸ்திரேலிய அணியின் வெற்றியானது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக கூடிய வெற்றி இலக்கை விரட்டி 10 விக்கெட்களினால் பெறப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்களிப்பு நேரம் நீடிப்பு குறித்து ஆலோசனை!

G. Pragas

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்; விஸ்வரூபமெடுக்க கூடாது

G. Pragas

இனி தேசிய பொங்கல் விழா இல்லை? துமிந்த தகவல்

G. Pragas