செய்திகள் பிராதான செய்தி

மிளாகாய் தூள் வீசியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – பிமல்

அரசியல் சதி இடம்பெற்ற போது நாடாளுமன்றில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

இன்று (07) நாடாளுமன்றில் ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து தெரிவித்தபோதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்ற கடந்த வருடம் ஒக்டோபர் மாத காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் மிகவும் மோசமான முறையில் செயற்பட்டு நாடாளுமன்ற ஒலிவாங்கி மற்றும் உபகரணங்களுக்கு நாசம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் மன்றிற்குள் மிளகாய் தூள் கரைத்து வீசி எறியப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பிரதி சபாநாயகர் தலைமையிலானகுழு 54 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என் பரிந்துரை செய்திருந்தது.

ஆனால் இதுவரை அந்த அறிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது நாடாளுமன்றம் தொடர்பாக மக்களுக்கு இருக்கும் கெளரவத்துக்கு பாதிப்பாகும். அதனால் இந்த விடயம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எடுக்க வேண்டும் – என்றார்.

Related posts

நபர் ஒருவரை கடத்திய 9 பேருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை!

G. Pragas

வசந்தவின் பதவி உள்ளிட்ட உறுப்புரிமை அதிரடியாக பறிக்கப்பட்டது

G. Pragas

ஆணையிறவு விபத்தில் ஒருவர் பலி!

G. Pragas

Leave a Comment