செய்திகள் பிந்திய செய்திகள்

மிஸ் இத்தாலி அழகிப் போட்டியில் இலங்கை வம்சாவளிப் பெண் 3ம் இடம்

இத்தாலியின் வேனிஸ் ஜெஸ்சோலோவில் நடைபெற்ற 2019ம் ஆண்டுக்கான “மிஸ் இத்தாலி” அழகு ராணி போட்டியில் இலங்கை வம்சாவளியான சேவ்மி தாருக பெர்னாண்டோ என்ற யுவதி மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

சேவ்மி தாருகா பெர்னாண்டோ புன்னகை அரசி என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். 20 வயதான சேவ்மி தாருகாவின் பெற்றோர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் குடியேறியுள்ளனர்.

இத்தாலியின் பாதுவா நகரில் பிறந்த சேவ்மி அழகியல் படிப்பில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளதுடன், மொடலாக தொழில் புரிந்து வருகிறார். மிஸ் இத்தாலி அழகு ராணி போட்டியின் இறுதி சுற்று தெரிவான இவர், வெனிடோ மாநிலத்தின் அழகு ராணி போட்டியில் வென்றுள்ளார்.

மாகாண ரீதியாக கலந்து கொண்ட 187 போட்டியாளர்களில் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட 80 போட்டியாளர்களில் சேவ்மி தாருகாவும் இடம்பிடித்ததுடன், கடந்த 6ம் திகதி நடந்த இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

இந்த அழகு ராணி போட்டியில் இத்தாலியை சேர்ந்த கோரோலினா ஸ்டாமரே வெற்றி பெற்றதுடன், செரினா பெட்ராலி என்ற யுவதி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டிசெம்பர் 3இல் நாடாளுமன்ற அமர்வு

Tharani

மேய்ச்சல் தரை இல்லாததால் ஆபத்தில் கால்நடைகள்!

Tharani

மைக்கல் சொய்ஷா காலமானார்

G. Pragas