uncategorized செய்திகள் விளையாட்டு

மீண்டது பஞ்சாப் : 8 விக்கெட்களால் அபார வெற்றி !!

ஐ.பி.எல். தொட­ரில் நேற்று நடந்த ஆட்­டத்­தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்களால்  வெற்­றி­ பெற்­றது. ஐ.பி.எல். தொட­ரின் 31ஆவது லீக் ஆட்­டம் நேற்று ஷார்­ஜா­வில் நடை­பெற்­றது. அதில் றோயல் சேலஞ்­சர்ஸ் பெங்­க­ளூர் அணி­யும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி­யும் மோதின. நாண­யச் சுழற்சியில் வென்ற பெங்­க­ளூர் அணி துடுப்­பாட்­டத்­தை தெரிவு செய்­தது.

அணி­யின் ஆரம்­பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக தேவ்­தத் படிக்­கல், ஆரோன் பிஞ்ச் ஆகி­யோர் களம் இறங்­கி­னர். இரு­வ­ரும் சீரான வேகத்­தில் ஓட்­டங்­களை எடுத்­த­னர். பந்­துப்­ப­ரி­மாற்­றத்­துக்கு 9 என்ற ஓட்ட விகி­தம் காணப்­பட்­டது. அணி­யின் ஓட்ட எண்­ணிக்கை 4.1 பந்­துப்­ப­ரி­மாற்­றத்­துக்கு 38 ஓட்­டங்­க­ளாக இருந்­த­போது படிக்­கல் 12 பந்­து­க­ளில் 18 ஓட்­டங்­கள் எடுத்த நிலை­யில் ஆட்டமி­ழந்­தார். 2 ஆவது விக்கெட்டுக்காக களம் புகுந்த கோலி – பிஞ்ச் இணை நின்று நிலைக்கவில்லை. பிஞ்ச் 20ஓட்டங்களுடனும் சுந்தர் 13 பவிலியன் திரும்பினர்.டிறுதியில் கோலி 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இறுதிக்கட்ட அதிரடியை மொறிஸ் – உதான ஜோடி கணகச்சிதமாக நிறைவு செய்தது.இதில் மொறிஸ் 8 பந்துகளில் 25 ஓட்டங்களையும் உதான 5 பந்துகளில் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் பெங்களூர் அணி 6 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.172 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணிக்கு கே.எல் ராகுல் – மாயங் அகர்வால் இணை நிதானமான ஆரம்பத்தை வழங்கியது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 7.6 பந்துப்பரிமாற்றத்தில்  78 ஆக இருந்த வேளை மாயங் அகர்வால் 25 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் – கெயில் ஜோடி வாணவேடிக்கை காட்ட ஆரம்பித்தது.இணைப்பாட்டமாக  93 ஓட்டங்கள் எடுத்த வேளை  கெயில் 45 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட்டாக இறுதியில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது பஞ்சாப் அணி. இறுதிவரை ஆட்டமிழக்காது 61 ஓட்டங்கள் எடுத்த கே.எல் ராகுல் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

வடமராட்சியில் கிளைமோர் தாக்குதல் – பொலிஸ் அதிகாரி காயம்!

G. Pragas

விஜயகுமாரதுங்கவின் 32வது சிரார்த்த தினம்

கதிர்

தமிழர்களை கொன்ற சுனில் விடுதலையானாரா? மஹிந்த கருத்து

G. Pragas