செய்திகள் யாழ்ப்பாணம்

மீண்டும் கடிதமெழுதிய சி.வி.கே.சி

“வட மாகாணத்தின் ஐந்து மாவட்டம் எதிலுமிருந்தும் வடமாகாணத்திற்கு வெளியே நெல் கொண்டு செல் வதைத் தடைசெய்தல் மிக கட்டாயமானதாகவே தோன்றுகிறது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வெளியே நெல் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது போல வட மாகாணத்திலும் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படல் வேண்டும்”

என்று வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் வடக்கு ஆளுநர், பிரதேச செயலாளர் மற்றும் ஐந்து மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

“அவசர தேவைகளை பூர்த்தி செய்தல்” எனும் தலைப்பின் கீழ் தங்களுக்கும் ஏனையோருக்கும் நாம் எழுதிய 08.04.2020 ஆம் திகதிய கடிதத் தின் கடைசிக்கு மேல் பந்தியில் பின்வருமாறு எழுதியிருந்தேன்.

‘குறிப்பாக உணவுப் பொருட்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலையில் அதனால் அதிகரித்த விலையும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகுவது தவிர்க்க முடியாததாகும். எனவே மேலதிக நெல் கொள்வனவை மேற்கொண்டு உள்ளூரில் இருக்கக்கூடிய அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தியை மேற்கொள்வதற்கும் இச்சங்கங்கள் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.’

சாதாரணமாக வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உற்பத்தியாகும் நெல் இம்மாகாண மக்களின் அரிசித் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யக்கூடியது என்பது எல்லோராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத் தாகும்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல் தனியார் துறையினரால் கொள்வனவு செய்யப்பட்டு மாகாணத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவதால் பல சந்தர்ப்பங்களில் அரிசித் தட்டுப்பாடு எதிர்கொள்ளப்பட்டு இருக்கிறது. வழமையாக குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யும் தனியார் துறையினர் தற்போது கூடிய விலை கொடுத்து கொள்வனவு செய்யக்கூடிய சாத்தியம் யதார்த்தமானது. – என்றுள்ளது.

Related posts

குருதித்தான முகாம்

G. Pragas

மெகசின் சிறையில் துப்பாக்கி சூடு! இருவர் படுகாயம்!

G. Pragas

ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு தள்ளுபடி

Tharani