in ,

மீண்டும் வெடித்தது எரிவாயு சிலிண்டர்!

கோப்பாய்- தெற்கு இருபாலைப் பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் தெற்கு – இருபாலையில் உள்ள ஒரு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது அடுப்பு எரிவதை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று அயலவரை அழைத்துள்ளார்.

இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற அயலவர்கள் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.

சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது!

இலங்கைக்கும் பரவுமா ஒமிக்ரோன் வைரஸ்? தடுப்பு நடவடிக்கையை உடன் ஆரம்பிக்கவும்!