in

மீண்டும் 3,000 தாண்டி எகிறுகிறது தொற்று! – 39 பேர் கொரோனாவுக்குப் பலி!!

நாட்டில் இன்று 3 ஆயிரத்து 306 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 547 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை கொரோனாத் தொற்றால் மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று (02) இரவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 566 ஆக உயர்ந்துள்ளது.

நாளொன்றில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் புதிதாக கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டு வந்த நிலையில் நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டது.

அதையடுத்து சற்றுக் குறைவடைந்திருந்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


இலங்கையில் மீண்டும் அவசர முடக்கம் – ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம் – கொழும்புக் கடலில் பேராபத்து – 5,000 ரூபா வழங்கல் ஆரம்பம் – இன்னும் பல முக்கியமான தகவல்களுடன்….!
👉 https://www.youtube.com/watch?v=1Olx_5Si24s
🌞 Subscribe us: https://bit.ly/2QOJTcB

இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதற்கு இடமளிக்கக்கூடாது.

கிளிநொச்சியில் பெண்ணின் சடலம்! – பொலிஸார் தீவிர விசாரணை!!