செய்திகள் விளையாட்டு

மீண்டு வந்து தங்கம் வென்றார் அனிதா

பதுளையில் 45வது தேசிய விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது. இதன்போது வடக்கு மாகாணத்திற்கான வீராங்கனை அனிதா ஜெகதீஸ்வரன் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று (25) காலை நடைப்பெற்ற மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலிலேயே அனிதா தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இவர் 3.30 மீற்றர் உயரம் தாண்டி தங்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கனை உதேனி வென்றார். இவர் 3.10 மீற்றர் உயரம் தாண்டினார். வெண்கலப் பதக்கத்தை 3.00 மீற்றர் உயரம் தாண்டிய மேல் மாகாண வீராங்கனை எஸ்.கே.பெரேரா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாவது நாளாகத் தொடர்கிறது தபால் மூல வாக்களிப்பு

G. Pragas

மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

G. Pragas

தேர்தல் பிரச்சாரத்தில் இன்று இறங்குகிறார் கோத்தா

G. Pragas

Leave a Comment