இந்திய செய்திகள்செய்திகள்

மீனவர்கள் கைதால் தமிழகம் கொதிப்பு!

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 43 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் இரவு இலங்கைக் கடற்படையால் 43 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்தோடு நேற்றும் மன்னாரில் மேலும் 12 மீனவர்கள் கைதாகியிருந்தனர்.
இந்தநிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
வேலை நிறுத்த அறிவிப்பால் சுமார் 800க்கும் அதிகமான விசைப் படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டுள்ளன. அத்துடன் 50 ஆயிரம் மீனவர்களும், ஒரு லட்சம் மீன்பிடி சார் தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் நாளை இராமேஸ்வரம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939