இந்திய செய்திகள் கிழக்கு மாகாணம் செய்திகள்

மீராவோடை தாருஸ்ஸலாமில் இரத்த தான முகாம்

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா அமைப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியோடு இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று நடைபெற்றது.

அமைப்பின் பொதுத்தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கல்குடா முஸ்லிம் பகுதிகளிலுள்ள பாடசாலைகள், அரபுக் கலாசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆண், பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டு இரத்தங்களை தானமாக வழங்கினர்.

குறித்த இரத்ததான முகாமில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.ஸாபிறா வஸீம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எம்.ஹாரீஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஆர்வத்தோடு பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ததுடன், நேரப்பற்றாக்குறை காரணமாக மேலதிகமாக சமூகமளித்தோரிடம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் குருதிக் கொடை வழங்க இரத்த வங்கிப் பிரிவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (கு)

Related posts

வெடுக்குநாரி மலை விவகாரத்தில் ஆலய நிர்வாகம் மீது வழக்கு

G. Pragas

யாழ் சென் பற்றிக்ஸ் பேனாட்சன் வெண்கலம் வென்றார்

G. Pragas

கேரள கஞ்சா மீட்பு! மூவர் கைது!

Tharani

Leave a Comment